Fast login

Advertisement

Banner Fshare

Foto

டக்ளஸ் போர்த்திய பொன்னாடை-மன்னிப்பு கேட்டார் பாடகர் உன்னி கிருஷ்ணன்avatar

EyestubePublisher

சென்னை: இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பொன்னாடை பெற்றுக் கொண்டதற்காக என்னை மன்னித்துவிடுங்கள் என்று கேட்டுள்ளார் பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன்.

பாடகர் உன்னிகிருஷ்ணன் இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து கூறியதாவது:
"நான் சுமார் 20, 25 ஆண்டுகளாக இசைத்துறையில் இருக்கிறேன். நன் பல்வேறு ஊர்களுக்கும் பல்வேறு நாடுகளுக்கும் சென்று இசை கச்சேரிகள் செய்து வருகிறேன். மேடையிலும் பாடி வருகிறேன்.

இப்படி சென்ற நாடுகளில் நான் முதலில் ஆஸ்திரேலியா செல்கிற வாய்ப்பையும் லண்டன் செல்கிற வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் யாழ்பாணத் தமிழர்கள். அதனால் அவர்கள் மீது எனக்கு தனி அன்பு உண்டு.

அப்படி ஒரு ஒரு அன்பான் அழப்பில்தான் அண்மையில் யாழ்பாணம் சென்று இருந்தேன். அங்குள்ளவர்களின் விருப்பத்திற்கிணங்க "ஸ்வானுபவ " அமைப்பு இந்தக் கச்சேரியை ஏற்பாடு செய்திருந்தது. இதன் அமைப்பாளர் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா.
யாழ்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழாவினை முன்னிட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அது மட்டுமல்ல அங்குள்ள ராமநாதன் இசைப் பள்ளியிலும் ஒரு சந்திப்பு அங்கு பயிலும் மாணவர்களுக்கு ஒரு விரிவுரை ஆற்றவும் திட்டம், என்று கூறியதும் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் யாழ்பாணம் சென்றேன்.

அழைப்பின்றி வந்த டக்ளஸ்:

கச்சேரி அழகாகப் போனது ஆனால் அங்கு எதிர்பாரத விதமாக ஒரு சம்பவம் நடந்தது. அங்கு வந்த அமைச்சர் டக்லஸ் தேவானந்தா எனக்குப் பொன்னாடை போர்த்தினார். இது தமிழ் மக்களின் மனதின் வெகுவாக வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார்கள். இந்த சம்பவம் நான் முற்றிலும் எதிபாராத ஒன்றாகும். அவர் கலந்து கொள்வார் என்பது எனக்குத் தெரியாது.

அழைப்பிதழில் அவர் கலந்து கொள்வார் என்றெல்லாம் போடவில்லை. திடீரென்று வந்தவர் அவர். ஆனால் இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது அவர் தமிழ் மக்களால் வெறுக்கப்படும் ஒருவர் என்பது.

இசைப் பயணத்தில் கரும்புள்ளி:

இந்த சம்பவம் எதிர்பாராததுதான் என்றாலும் இதற்காக நன் மிகவும் வருத்தம் அடைகிறேன். என் இசைப் பயணத்தில் இதை ஒரு கரும்புள்ளியாக் கருதுகிறேன்.

எதுவும் பிரச்சனை இருக்காது என்று இந்திய காலாசார கமிஷன் உறுதியளித்தது அந்த நம்பிக்கையில்தான் அங்கு சென்றேன். இருந்தாலும் இப்படி நடந்து விட்டது.
இனி இது போல ஒன்று நிச்சயமாக நடக்காது என்று உறுதியளிக்கிறேன். எப்போதும் போல் உலகெங்கும் உள்ள தமிழ்மக்கள் உங்களில் ஒருவனாக என்னை ஏற்று ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

உலகெங்கும் நான் ஈழத் தமிழர்களின் மேடைகளில் பாடும் போது -
' அம்மா உன் பிள்ளை உயிரோடு இல்லை...', ' எங்கள் தேசத்தில் இடி விழுந்தது...',
'பூக்கள் வாசம் வீசும் காற்றில்...' - போன்ற பாடல்களைப் பாடும் போது என்னை அறியாமல் கண்கள் கலங்கும்.

ஈழத் தமிழர்களின் விடுதலை சார்ந்த அவர்களின் கோபத்தையும் வலியையும் வெளிப்படுத்துகிற பல பாடல்களை பாடும்போது, கேட்கிற மக்களும் உள்ளம் மல்க ஈழத்தின் கோர வடுக்களை தங்கி நிற்பதை நான் நேரில் பல முறை பார்த்திருக்கிறேன். நெகிழ்ந்திருக்கிறேன்.

அந்த வகையில்தான் ஈழத் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் ஒன்றான யாழ்பாணம் சென்றேன். யாழ்பாணம் மக்களின் துயரங்களில் கலந்து கொள்ளலாம் என்று எண்ணியே யாழ்பாணம் சென்றேன்.

எதிர்பாராது நடந்த இந்த தவறுக்காக மீண்டும் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.

---Chữ ký thành viên---
_________________
Eyestube | Publish Yourself

Permissions in this forum:
You cannot reply to topics in this forum