ஒழுக்கம், நேரம் தவறாமை, திட்டமிடல் உள்ளிட்டவைகளை எஸ்.ஏ.சி.யிடம் கற்றுகொண்டேன்: ஷங்கர் பேச்சு!!

Eyestube
தமிழில் விஜயகாந்த், இந்தியில் ரஜினிகாந்த், மலையாளத்தில் கமல்ஹாசன், தெலுங்கில் சிரஞ்சீவி உள்ளிட்ட நட்சத்திர பிரபலங்கள் நடித்து வெளியான ஐந்து மொழிகளிலும் சூப்பர்-டூப்பர் ஹிட்டான எஸ்.ஏ.சந்திரசேகரின், "சட்டம் ஒரு இருட்டறை" திரைப்படம் மீண்டும் உருவாகி வருவது அறிந்ததே!

இந்தமுறை இயக்குநர் எஸ்.ஏ.சி.யின் தயாரிப்பு மற்றும் இயக்க மேற்பார்வையில் உருவாகும் சட்டம் ஒரு இருட்டறை படத்தை எஸ்.ஏ.சி.யின் உதவியாளரும், உறவுக்கார பெண்ணுமான சினேகா பிரிட்டோ(சென்னை, லயோலா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேசன் படித்தவர்..) மிகப்பிரமாண்டமாக இயக்கியுள்ளார். ரீ‌மாசென், பியா, பிந்துமாதவி, "ஆச்சர்யங்கள்" தமன்குமார், காமெடி மகேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்பட இளம் இயக்குநர் உள்ளிட்ட டீமையும், டீசரையும் மீடியாக்களுக்கு நேற்று சென்னை வடபழனி கிரீன்பார்க் நட்சத்திர ஹோட்டலில் அறிமுகப்படுத்தி வைத்து பேசினார் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர்!

அவர் பேசுகையில், நான் பெரிதாக எதுவும் சாதித்ததாக எனக்கு என்றுமே தோன்றியது கிடையாது. அப்படி நான் ஏதாவது சாதித்திருக்கிறேன் என நீங்கள் யாராவது கருதினால் அந்த பெருமை மொத்தமும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அவர்களையே சாரும். காரணம் இயக்குநர் எஸ்.ஏ.சி. அவர்களிடம் உதவியாளராக சேருவதற்கு முன் ஒருசில மேடை நாடகங்களில் நடித்தபடி நாடக நடிகராக இருந்த நான், மிகுந்த சோம்‌பேறியாகவும் இருந்தேன். அவரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு தான் சென்றேன். ஆனாலும் உதவி இயக்குநர் ஆகிவிட்டேன். எஸ்.ஏ.சி. அவர்களிடம்தான் சுறுசுறுப்பு என்றால் என்ன என்பதை கற்றுக்கொண்டேன். அதேமாதிரி ஒழுக்கம், நேரம் தவறாமை, திட்டமிடல் உள்ளிட்டவைகளையும் அவரிடம் கற்றுகொண்டு தான் இன்று ஒரு இயக்குநராக உங்கள் முன் நிற்கிறேன். என்னை மாதிரி ஏராளமானவர்களை வளர்த்துவிட்டவர் இயக்குநர் எஸ்.ஏ.சி., அவரிடமிருந்து புதிதாக வந்திருக்கும் இளம் பெண் இயக்குநர் சினேகா பிரிட்டோவும், இந்த படமும், இதில் நடித்திருக்கும் நட்சத்திரங்களும், பணிபுரிந்திருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களும் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.

இயக்குநர் ஷங்கருக்கு முன்னதாக பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சி., ஷங்கரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். அன்றும் சரி, இன்றும் சரி, சொன்னால் சொன்னபடி நடந்து கொள்வார். ஒரு படவிழா, நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்றேன். என்ன விழா, ஏதுவிழா என்று எதுவும் கேட்காமல் சொன்ன நேரத்திற்கு இங்கு வந்துவிட்டார். அதுதான் ஷங்கர். அவர் என்னிடம் உதவியாளராக இருந்து என்ன கற்றுக் கொண்டாரோ எனக்கு தெரியாது... ஆனால் அவரிடம் இத்தனை பிஸியிலும் கொடுத்த வாக்குறுதியை காபந்து செய்யும் தன்னை என்னை வியக்க வைக்கும் விஷயமாகும். இன்று கூட எங்கோ உள்ள பெருங்குடியில் ஷூட்டிங்கில் இருந்தவர் எனக்காக இங்கு வந்திருக்கிறார். நன்றி! என்று பேசிய எஸ்.ஏ.சி., சட்டம் ஒரு இருட்டறை பழைய படத்தில் குடும்பத்திற்காக ஒரு இளைஞனின் போராட்டத்தை சொல்லி இருந்தேன். இதில் காதலுக்காக ஒரு இளைஞனின் போராட்டத்தை இன்றைய ரசிகர்களின் ரசனைக்கேற்ப பிரமாண்டமாக சொல்ல வேண்டும் என்றார் என் பேத்தி சினேகா பிரிட்டோ. அதற்காகத்தான் இந்த அறிமுக விழாவிற்கு பிரமாண்ட இயக்குநர் ஷங்கரை அழைத்திருந்தேன் என்றார்.

இவ்விழாவில் ஷோபா சந்திரசேகர், தயாரிப்பாளர்கள் விமலாராணி, சேவியர் பிரிட்டோ(இயக்குநர் சினேகா பிரிட்டோவின் பெற்றோர்...), இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, ரீமா சென், பிந்து மாதவி, பியா, ஆச்சர்யங்கள் தமன்குமார், காமெடி மகேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உருக்கமாவும், உற்சாகமாகவும் பேசினர்!

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!