Fast login

Advertisement

Banner Fshare

Foto

பார்த்திபனுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்...!



avatar

EyestubePublisher

ரஜினி நடித்த தில்லு முல்லு படம் இப்போது மீண்டும் ரீ-மேக் ஆகி வருகிறது. இதில் நாயகனாக சிவாவும், நாயகியாக இஷா தல்வாரும் நடிக்கின்றனர். இருதினங்களுக்கு முன்னர் இப்படத்தின் துவக்கவிழா சென்னையில் நடந்தது. விழாவில் சினிமா நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்று படம் குறித்து வாழ்த்தி பேசினர். அதில் பார்த்திபன் பேசுகையில், தில்லு முல்லு படத்தின் நாயகி இஷா தல்வார் ரொம்ப அழகாக இருக்கிறார். இப்படியொரு நாயகி கிடைத்தால், சிவபெருமானே தனது மனைவி பார்வதியை விட்டுவிட்டு இதுபோன்ற நாயகியுடன் ஒரு டூயட் பாடல் பாடிவிட்டு போவார் என்றார். பார்த்திபனின் இந்த பேச்சுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹீரோயின்களை புகழ்வதை பார்த்திபன் வழக்கமாக கொண்டுள்ளார். அதைப்பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை. ஆனால் இந்துக்களின் கடவுளான சிவன், நடிகையுடன் டூயட் பாட வருவார் என்று அவர் பேசி இருப்பது வரம்பு மீறிய செயல். பார்த்திபன் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளார்.

---Chữ ký thành viên---
_________________
Eyestube | Publish Yourself

Permissions in this forum:
You cannot reply to topics in this forum