நடிகர் திலகன் கவலைக்கிடம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

avatar
பிரபல மலையாள நடிகர் திலகன் (76) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கவலைக்கிடமான நிலையில் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சத்ரியன் உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் நடித்துள்ள திலகன், கடந்த 21ம்தேதி திருச்சூரில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொண்டபோது மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஏற்கனவே இரு முறை மாரடைப்பு தாக்கியுள்ள அவருக்கு சிறுநீரக கோளாறும் உள்ளது.

முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனைக்கு திலகனை கொண்டு சென்றனர். தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ள அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்குச் சென்று திலகனிடம் உடல்நலம் விசாரித்த கேரள சுகாதாரத்துறை மந்திரி வி.எஸ்.சிவகுமார், திலகனின் மருத்துவ செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.


_________________
Eyestube | Publish Yourself
EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!