Fast login

Advertisement

Banner Fshare

Foto

அக்கா அண்ணியாக நடிக்க மாட்டேன்: ரீமா சென்



avatar

EyestubePublisher

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை படம் ரீமேக் செய்யப்படுகிறது. எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பில் அவரது பேத்தி சினேஹா இயக்கி வருகிறார். தமன்குமார், பியா, பிந்து மாதவி நடிக்கிறார்கள். இதில் ரீமா சென் போலீஸ் அதிகாரி வேடத்தில் ஹீரோவின் அக்காவாக நடிக்கிறார்.

அவரின் மினி பேட்டி: எனக்கு திருமணமாகிவிட்டதால் அக்கா அண்ணி கேரக்டரில் நடிக்க வந்துவிட்டதாக சிலர் கிண்டல் செய்கிறார்கள். திருமணம் ஆகிவிட்டால் வயது கூடிவிடுமா? இல்லை அழகுதான் போய்விடுமா?. நான் இப்போதும் அழகாக, கிளாமராக இருக்கிறேன். அதனால் அக்கா அண்ணி கேரக்டரில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்தப் படத்தை பொறுத்தவரை இந்தியில் ஹேமமாலினி நடித்த பவர்புல் கேரக்டர் என்பதால் நடித்தேன். ரீமேக்கில் எனது கேரக்டரை விரிவுபடுத்தி, காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். 18வயது சின்ன பெண் இயக்குகிறார் அவரை ஊக்கப்படுத்த வேண்டியது சீனியர் என்கிற முறையில் எனது கடமை. எனக்கு கிளாமர் நடிகை என்று பெயர் இருப்பது சந்தோஷம்தான். ஆனால் எந்தப் படத்திலும் உடம்பை காட்டி நடிக்கவில்லை. நான் முழுக்க சேலை அணிந்து வந்தாலும் கிளாமராகத் தெரிவேன். இது கடவுள் கொடுத்த வரம்.

---Chữ ký thành viên---
_________________
Eyestube | Publish Yourself

Permissions in this forum:
You cannot reply to topics in this forum