Fast login

Advertisement

Banner Fshare

Foto

பணக்காரன் தலைப்பால் பணத்தை இழந்த தயாரிப்பாளர்



avatar

EyestubePublisher

பாலுமகேந்திரா, பேரரசு ஆகியோரிடம் உதவியாளராக இருந்தவர் வி.ஜே.ஜெகநாதன். இவருக்கு தனியாக ஒரு படம் இயக்க ஆசை. ஆனால் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. இதனால் ஊரில் இருக்கிற சொத்துக்களை விற்று பணக்காரன் என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரித்து இயக்கினார்.

கவுதம், கனியா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளார்கள், இவர்கள் தவிர கே.பாக்யராஜ், ரமேஷ் கண்ணா, ராஜா, ரவிமரியா, ஆஷிஷ்வித்யார்த்தி, ரேகா, ரஞ்சனி, மனோபாலா என்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்தப் படத்துக்கு பணக்காரன் என்ற தலைப்பு வைத்ததால் பல லட்சத்தை இழந்துள்ளதாக தயாரிப்பாளரும், இயக்குனருமான வி.ஜே.ஜெகநாதன் கூறுகிறார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: ஒருவன் செய்த உதவியால் இன்னொருவன் பெரிய பணக்காரன் ஆகிறான். பணக்காரன் ஆனாலும் செய்த நன்றியை மறக்காமல் உதவி செய்த நண்பனை பணக்காரன் ஆக்குகிறான். இதுதான் படத்தோட கதை சுருக்கம். இதற்கு பணக்காரன் என்ற தலைப்புதான் பொருத்தமாக இருக்கும் என்று கருதி அந்த பையரை கில்டில் பதிவு செய்தோம். ரஜினி நடித்த படத்தின் தலைப்பு என்பதால் முறைப்படி சத்யா மூவீஸ் சென்று அனுமதி கேட்டோம். அவர்களும் தாராளமாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு முன்னால் ஒரு வார்த்தை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். இவனும் பணக்காரன் என்று பெயர் வைத்து படத்தை தயாரித்து முடித்தோம். பாடல் வெளியீட்டு விழாவை பெரும் செலவில் நடத்தி பல ஆயிரம் சி.டிக்களை வெளியிட்டோம்.

இத்தனைக்கும் பிறகு திடீரென்னு சத்யா மூவீசும், தயாரிப்பாளர் சங்கமும் இந்த தலைப்பை பயன்படுத்தவே கூடாது என்று சொன்னார்கள். இந்த தலைப்பை பிரபலப்படுத்த இதுவரை பல லட்சம் செலவு செய்திருக்கிறேன். இப்போது புதிய பெயர் வைத்தால் அதை பிரபலபடுத்த இன்னும் செலவு செய்ய வேண்டும். ஆரம்பத்திலேயே நீங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் நான் பெயரை மாற்றி இருப்பேன் என்று அவர்களிடம் சொன்னேன். அவர்கள் கேட்கவில்லை.

சிறிய தயாரிப்பாளரான நான் அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால் படத்தின் பெயரை இவனும் பாசக்காரன் என்று மாற்றி விட்டேன். பணக்காரன் தலைப்பை சத்யா மூவீஸ் பதிவு செய்து வைத்திருக்கவில்லை. பணக்காரன் படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் நான் கோர்ட்டுக்கு போனால் என் பக்கம்தான் நீதி கிடைக்கும். ஆனால் அதற்கான நேரமோ, சக்தியோ என்னிடம் இல்லை. அதனால் இவனும் பாசக்காரன் என்ற பெயரிலேயே படத்தை வெளியிடுகிறேன். என்றார்.

---Chữ ký thành viên---
_________________
Eyestube | Publish Yourself

Permissions in this forum:
You cannot reply to topics in this forum