காமெடியாகத்தானே பேசினேன், மன்னிச்சிருங்க... பார்த்திபன்

Eyestube
காமெடியாகத்தானே பேசினேன், மன்னிச்சிருங்க... பார்த்திபன் 29-parthiban-12-300
சென்னை: நான் தில்லுமுல்லு படத் தொடக்க விழாவில் பேசியது பார்வையாளர்களை மகிழ்விக்கும் நோக்கத்தில்தான். நகைச்சுவையாகத்தான் பேசினேன். அது யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று நடிகர்-இயக்குநர் பார்த்திபன் கூறியுள்ளார்.

தில்லுமுல்லு பட நாயகி இஷா தல்வார் மட்டும் கிடைத்தால் சிவனே பார்வதியை தள்ளி வைத்து விட்டு டூயட் பாட வருவார் என்று பேசியிருந்தார் பார்த்திபன். இந்தப் பேச்சுக்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. போராட்டத்தையும் அறிவித்திருந்தது.

இதையடுத்து மன்னிப்பு கேட்டு அறிக்கை விட்டுள்ளார் பார்த்திபன். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில தினங்களுக்கு முன், தில்லுமுல்லு பட தொடக்க விழாவில் நான் பேசிய நகைச்சுவையான பேச்சு வெளியாகியிருந்தது.

அந்த பேச்சு பிரச்சினைக்குரியதாக ஆக்கப்பட்டு, முற்றுகை போராட்டம் என்று பூதாகரமாகி விட்டது. நான் திரைப்பட நிகழ்ச்சிகளில் பங்கேற்பது சம்பந்தப்பட்டவர்களை வாழ்த்தவும், பார்வையாளர்களை மகிழ்விக்கவும் மட்டுமே. அதற்கு ஓட்டை காலணாவைக் கூட சன்மானமாக பெறுவதில்லை.
யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு துளியும் இல்லை. அதை பயன்படுத்தி யாரை திட்டும் திட்டமிடுதலும் இல்லை.

கடவுள் விருப்பு-மறுப்பு என்பது அவரவர் ஏற்பு. அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. ஆனால் ஒருவரின் நம்பிக்கை, அது விருப்போ-மறுப்போ அதை புண்படுத்த எவருக்கும் அதிகாரமில்லை.
சிவனே சிவனேன்னு இருக்க முடியாது என்று நான் நகைச்சுவையாகத்தான் பேசினேன். அப்படி பேசியிருக்கக் கூடாது என்று பின்னர் வருத்தப்பட்டேன். அந்த பேச்சின் மூலம் யார் மனம் புண்பட்டி ருந்தாலும், அவர்களுக்கு என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மனம்தான் கோவில். அதில் உள்ள நல்லெண்ணங்களே தெய்வம். அதன் மீது கல்லெறிவது என்னைப் பொருத்தவரை அது தெய்வ குற்றம். நான் கடவுள் நம்பிக்கை மிகுந்தவன். அந்த கடவுள் காட்சிப்படுத்த முடியாதது. எந்த கட்சிக்குள்ளும் கட்டுப்படுத்த முடியாதது.

ஆண்பால்-பெண்பால், உருவம்-அருவம் என்று எதற்குள்ளும் கட்டுப்படாத மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு அண்டம். விவரிப்பிற்கு அப்பாற்பட்ட விஸ்தீரம். அதை நான் உள்ளொளியாய் வழிபடுகிறேன்.
நாம் அனைவரும் உடனடியாக போராடி தீர்க்கப்பட வேண்டியது, (ஊழல்) வளர்ச்சி அடைந்துள்ள இந்தியாவில், வறுமையால் ஒரு சிறு வயிறும் வாடாமல் இருப்பதே. மனிதம் வளர்ப்பது தெய்வத் திருப்பணியே என்று கூறியுள்ளார் பார்த்திபன்.


_________________
Eyestube | Publish Yourself
EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!