இசைஞானி இசையில் இயக்குநர்கள் விருப்பம்...!

Eyestube
இளையராஜாவின் நீதானே என் பொன்வசந்தம் இசை வெளியீட்டு விழாவை ஒரே செய்தியில் அடக்க முடியுமா என்று தெரியவில்லை. அத்தனை சுவாரஸ்ய நிகழ்வுகளுடன் நடந்து, ரசிகனின் மனதில் நிரந்தர இடம் பிடித்துவிட்டது அந்த நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியின் ஹைலைட், ராஜாவுடன் பணியாற்றிய பெரும்பாலான இயக்குநர்கள் பங்கேற்று, ராஜாவுடனான தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுதான்!

முதலில் இந்த நிகழ்ச்சி எப்படி டிசைன் பண்ணப்பட்டிருந்தது என்பதைச் சொல்லிவிட்டால், நிகழ்ச்சி பற்றிய செய்திகளை புரிந்து ரசிக்க ஏதுவாக இருக்கும்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், ஹங்கேரியிலிருந்து வந்திருந்த 65 இசைக் கலைஞர்கள், ராஜாவின் பிரபலமான பாடல்களை இசையாக வாசித்து, ரசிகர்களுக்கு ஒரு தெவிட்டாத இசை விருந்தை அளித்தனர்.

அடுத்து கவுதம் மேனன் மேடைக்கு வந்தார். இசைஞானி வருவதற்குள், உறவுகள் தொடர்கதை.. பாடலை ஒரு புரொபஷனல் பாடகர் ரேஞ்சுக்குப் பாடி அசத்தினார். அப்புறம் ராஜா வர, ஒரு சின்ன இசைப் பேட்டி மேடையில் அரங்கேறியது.
அதன் பிறகு, ஒவ்வொரு பாடலாக விஐபிகள் அறிமுகப்படுத்த, அதை மேடையில் லைவாக பாடி இசைத்தனர் இசைக்குழுவினர்.

நான்கு பாடல்கள் முடிந்ததும் ஒரு இடைவெளி. அதில், ராஜாவுடன் பணியாற்றிய பிரபல சாதனை இயக்குநர்களை, அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கே போய் பேச வைத்தார் கவுதம் மேனன்.

ராஜாவுடன் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, அப்படியே தங்களுக்குப் பிடித்த பாடல் ஒன்றை அவர்கள் குறிப்பிட, அதை பாடகர் கார்த்திக், கிடாரிஸ்ட் ஸ்டீவுடன் இணைந்து பாடிக் காட்ட அது ஒரு தனி அனுபவமாக அமைந்தது.

அப்படி இயக்குநர்கள் தங்கள் விருப்பமாகக் குறிப்பிட்ட பாடல்களின் பட்டியல்:

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு - பாரதிராஜா
தும்பி வா... - பாலு மகேந்திரா
பூங்காற்று திரும்புமா.... கே பாலச்சந்தர்
ஒரே நாள்... - பி வாசு
பச்ச மல பூவு - ஆர்வி உதயகுமார்
அம்மா என்றழைக்காத - ஆர் சுந்தர்ராஜன்
வளையோசை... - சுரேஷ் கிருஷ்ணா
ஆசை நூறு வகை... - எஸ் பி முத்துராமன்
ஆட்டமா தேரோட்டமா - ஆர்கே செல்வமணி

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, மீண்டும் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மற்ற 4 பாடல்கள் இசைக்கப்பட்டன.


_________________
Eyestube | Publish Yourself
EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!