ஏன் பிடிவாதமாக உங்கள் பெயருடன் அய்யரை ஒட்டிக் கொண்டே இருக்கிறீர்கள்? - ஜனனியிடம் ஒரு கேள்வி

Eyestube
ஏன் பிடிவாதமாக உங்கள் பெயருடன் அய்யரை ஒட்டிக் கொண்டே இருக்கிறீர்கள்? - ஜனனியிடம் ஒரு கேள்வி 07-jan10
பல படங்களில் நடித்திருந்தாலும் பாகன் படத்தில் ஸ்ரீகாந்த் எனக்கு ஒரு புதுமுகம் போலத்தான் தெரிந்தார், என்கிறார் ஜனனி (அய்யர்).

அவன் இவன் படத்தில் அறிமுகமான ஜனனி அடுத்து நடிக்கும் படம் பாகன்.
அஸ்லம் இயக்க, விபி புரொக்டஷன்ஸ் தயாரிப்பில் வேந்தர் மூவீஸ் வெளியிடும் பாகனில் நடித்த அனுபவங்களை செய்தியாளர்களிடம் இன்று பகிர்ந்து கொண்டார் ஜனனி.

ஜனனியுடன் ஒரு பேட்டி:

முதல் படம் நடித்ததற்கும் இந்தப் படத்தில் நடித்ததற்கும் என்ன வித்தியாசம் உணர்கிறீர்கள்?

முதல் படம் பாலா சார் இயக்கத்தில் நடித்தேன். அது எனக்கு முற்றிலும் புதிய அனுபவம். ஆனால் அந்த அனுபவம்தான் இந்தப் படத்தில் எனக்கு கை கொடுத்திருக்கிறது. எனது கேரக்டரை ரொம்ப ஈஸியாகச் செய்தேன்.

ஸ்ரீகாந்துடன் நடித்த அனுபவம்?

மிகவும் திறமையான நடிகர் அவர். எனக்கு அவரது நடிப்பு ரொம்பப் பிடிக்கும். இத்தனை படங்கள் செய்திருந்தாலும், பாகன் செட்டில் ஒரு புதுமுக நடிகரைப் போன்ற ஆர்வத்துடனும் அ்டக்கத்துடனும் அவர் இருந்தார். அது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அவரைப் பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன்.

சரி, ஏன் பிடிவாதமாக உங்கள் பெயருடன் அய்யரை ஒட்டிக் கொண்டே இருக்கிறீர்கள்? அது ஒரு உறுத்தலாக இல்லையா?

எனக்கு அப்படித் தெரியவில்லை. இது என் பெற்றோர் வைத்த பெயர். இதில் எனக்கு எந்த உறுத்தலும் இல்லை.

எந்தக் காட்சியில் ரொம்ப கஷ்டப்பட்டீர்கள்?

இந்தப் படத்தைப் பொறுத்தவரை அப்படி எந்தக் கஷ்டமும் நான் படவில்லை. எனக்கு எல்லா காட்சிகளும் சுவாரஸ்யமாக இருந்தன. இயக்குநர் அஸ்லம் அத்தனை திறமைசாலி. சேரன், அமீருடன் பணியாற்றியவர் என்பதால், நன்றாக திட்டமிட்டு காட்சிகளை முன்கூட்டியே விளக்கி என்னிடம் வேலை வாங்கினார்.


_________________
Eyestube | Publish Yourself
EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!