மகளுக்கு 15 வயசுதானே ஆகிறது.. ஸ்ரீதேவி

Eyestube
மகளுக்கு 15 வயசுதானே ஆகிறது.. ஸ்ரீதேவி 25-jha10
எனது மகள் ஜான்விக்கு 15 வயதுதான் ஆகிறது. அவரை சினிமாவில் நடிக்க வைக்க நான் விரும்பவில்லை. அவரது படிப்பு பாழாகி விடும் என்று கூறியுள்ளார் முன்னாள் கவர்ச்சிக் கன்னி ஸ்ரீதேவி.
4 வயதிலேயே நடிக்க வந்தவர் ஸ்ரீதேவி. 16 வயதாக இருந்தபோது 16 வயதினிலே படத்தில் தனி நாயகியாக நடித்து அந்தக் காலத்து இளசுகளின் மனங்களைக் கவர்ந்து சென்றார். ஆனால் தனது மகளை நடிக்க வைக்க அவர் ரொம்பவே தயங்குகிறார்.

அவரது மூத்த மகள் ஜான்விக்கு தற்போது 15 வயதாகிறது. அவரை சினிமாவில் நடிக்க வைக்க பலரும் கடுமையாக முயன்று வருகின்றனர். ஆனால் ஸ்ரீதேவிக்குத்தான் அதில் விருப்பம் இல்லையாம்.

இதுகுறித்து ஸ்ரீதேவி கூறுகையில், இந்த வயது சினிமாவில் நடிப்பதற்கான வயது இல்லை. நான் எங்கு போனாலும் அவரும் கூடவே வருகிறார். ஆனால் ஒரு தோழியாக, மகளாகத்தான் வருகிறார். அவரை ஒரு நடிகையாக நான் இன்னும் பார்க்கவில்லை. சினிமாவில் நடிக்க வைக்கத்தான் நான் எனது மகளை கூடவே கூட்டிப் போவதாக கூற முடியாது.

எனது மகளை ஆர்க் லைட் வெளிச்சத்திற்குக் கீழ் நிறுத்த நான் விரும்பவில்லை. தற்போது அவர் படித்துக் கொண்டிருக்கிறார், சும்மா சொல்லக் கூடாது, நன்றாகவே படிக்கிறார். அவரது படிப்பு மீதான கவனம் திசை திரும்புவதை நான் விரும்பவில்லை. இப்போது நடிக்க வந்தால் படிப்பு பாழாகி விடும் என்றார் ஸ்ரீதேவி.

என்னதான் இருந்தாலும் மகளாச்சே, நடிக்க வைக்க யோசிக்கதானே செய்யும் தாய் மனம்...!


_________________
Eyestube | Publish Yourself
EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!