தகாத வார்த்தைகளால் திட்டினார்கள் - உறுப்பினர்கள் மீது அமீர் குற்றச்சாட்டு

Eyestube
தகாத வார்த்தைகளால் திட்டினார்கள் - உறுப்பினர்கள் மீது அமீர் குற்றச்சாட்டு 27-ame10
சென்னை: சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, அகௌரவப்படுத்தி வருகின்றனர். என் சுயமரியாதையைக் காத்துக் கொள்ள, செயலர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என இயக்குநர் அமீர் விளக்கம் அளித்துள்ளார்.

தாண்டவம் கதை விவகாரத்தில் எழுந்த மோதலைத் தொடர்ந்து இன்று இயக்குநர் சங்க செயலர் பொறுப்பிலிருந்து விலகினார் அமீர்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள விளக்கக் கடிதம்:

தாண்டவம் படத்தின் கதை உரிமை தொடர்பாக என்மீது செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏழுபேர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

என்னை குற்றம்சாட்டுவதாக நினைத்து ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் குற்றம்சாட்டுகின்றனர். அதன் தொடர்ச்சியாக கடந்த மூன்று நாட்களாக நமது சங்கத்துக்கு வந்து என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, கீழ்த்தரமாக நடந்து கொண்டு சங்கத்தின் கண்ணியத்தை காயப்படுத்தியிருக்கிறார்கள்.

சந்தேகத்தின் நிழலோடு ஒருபோதும் எந்தப் பதவியிலும் இருக்க விரும்பாதவன் நான். நான் தொடர்ந்து இப்பதவியில் இருந்தால் இவர்கள் மேலும் மேலும் என்னை அகௌரவப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு சங்கத்தின் கவுரவத்தைக் குறைத்துக் கொண்டே இருப்பார்கள்.

தனிமனிதனை விட சங்கமே முக்கியம் என்று கருதுவதாலும், வலிமையாக உருவெடுத்திருக்கிற நமது சங்கம் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதற்காகவும் என் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.

-இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


_________________
Eyestube | Publish Yourself
EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!