இந்திய சினிமா படங்கள், வாகனங்களுக்கு தடை விதித்த நேபாள மாவோயிஸ்டுகள்!

Eyestube
காட்மாண்டு: இனி நேபாளத்தில் இந்தியப் படங்கள் வரக்கூடாது, இந்திய பதிவு எண் கொண்ட வாகனங்களையும் பயன்படுத்தக் கூடாது என சிபிஎன் மாவோயிஸ்டுகள் தடை விதித்துள்ளனர்.
இவர்கள் நேபாளத்தில் ஆளும் மாவோயிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கியவர்கள். தங்களுக்கு செல்வாக்குள்ள 10 மாவட்டங்களில் அவர்கள் இத்தடையை விதித்துள்ளனர்.

இது தொடர்பாக அக்கட்சித் தலைவர்களில் ஒருவரான தேவ் குருங் கூறுகையில், "ஹிந்தி திரைப்படங்களை திரையிடவும், ஹிந்தி பாடல்களை ஒலிபரப்பவும் 10 மாவட்டங்களில் தடை விதித்துள்ளோம். நேபாள திரைப்படங்களையும், பாடல்களையும் காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய பதிவு எண்களைக் கொண்ட வாகனங்களைப் பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து ஏராளமான வேளாண்மை உற்பத்தி பொருள்கள் நேபாளத்துக்குக் கொண்டு வந்து விற்கப்படுகின்றன.

இதனால் உள்நாட்டு வேளாண்மை சந்தை நஷ்டத்தைச் சந்திக்கிறது. எனவேதான் இந்திய பதிவு வாகனங்களுக்குத் தடை விதித்துள்ளோம். இத்தடைகளை மீறுவோர் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்," என்று அவர் எச்சரித்தார்.

மாவோயிஸ்டுகளின் தடையை அடுத்து, கேபிள் டி.வி. நடத்துவோர் ஹிந்தி பாடல்களை ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்திவிட்டனர். தியேட்டர்களிலிருந்து படங்களையும் தூக்கிவிட்டனர்.

நேபாளத்தை நட்பு நாடாக அறிவித்து, பல்லாயிரம் கோடி ரூபாய் உதவிகளை செய்து வருகிறது இந்தியா. இன்றும் அந்நாட்டின் உள்கட்டமைப்பை இந்தியாதான் செய்து வருகிறது. நேபாளத்தின் முக்கிய வருவாய் ஆதாரமான சுற்றுலாவை மேம்படுத்தித் தந்திருப்பதும் இந்தியாதான். நேபாளத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 70 சதவீதம் பேர் இந்தியர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தடை குறித்து இந்தியத் தூதரகம் கருத்து சொல்ல மறுத்துவிட்டது.


_________________
Eyestube | Publish Yourself
EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!