இயக்குநர் சங்க பதவியிலிருந்து அமீர் விலகல்!

Eyestube
இயக்குநர் சங்க பதவியிலிருந்து அமீர் விலகல்! 27-ame11
தாண்டவம் படத்தின் கதை விவகாரம் இயக்குநர் சங்கத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சங்கத்தின் செயலர் பொறுப்பிலிருந்து இயக்குநர் அமீர் இன்று ராஜினாமா செய்துள்ளார்.

இன்னொரு பக்கம் உதவி இயக்குநர் பொன்னுசாமிக்கு நியாயம் கிடைக்க வேண்டி, சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் ஒரு இணைச் செயலர் பதவி விலகியுள்ளனர்.

இதனால் இயக்குநர் சங்கமே இரண்டாக பிளவுபட்டு நிற்கும் சூழல் உருவாகியுள்ளது.

தாண்டவம் படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் பொன்னுசாமி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குப் போகும் முன் இயக்குநர் சங்கத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் படத்தைத் தயாரித்த யுடிவி மற்றும் பிரச்சினையை விசாரித்த இயக்குநர் சங்க குழுவுக்கிடையில் எந்த உடன்பாடும் எட்ட முடியவில்லை.

கடைசி நேரத்தில்தான் பொன்னுசாமி நீதிமன்றம் போனார். அவருக்கு ஆதரவான நிலையை சங்கத்தில் செயற்குழு உறுப்பினர்களாக உள்ள உதவி இயக்குநர்கள் எடுத்தனர். சங்கத்தின் சார்பில் இவர்கள் கையொப்பமிட்டு கடிதம் ஒன்றை பொன்னுசாமிக்கு ஆதரவாக அளித்தனர்.

இந்தக் கடிதம் தன் அனுமதியில்லாமல் தரப்பட்டிருப்பதாகக் கூறி சங்கத்தின் செயலர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார் இயக்குநர் அமீர்.

இது கட்டுப்பாட்டை மீறிய செயல். தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் அனுமதியின்றி சங்கத்தின் லெட்டர்பேடில் கடிதம் தந்தது தவறு. இதனால் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை தலைவராக உள்ள பாரதிராஜாதான் விசாரித்து தீர்த்து வைக்க வேண்டும் என அமீர் கூறியுள்ளார்.


_________________
Eyestube | Publish Yourself
EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!