அழகை காட்டாமல் ஏமாற்றியதற்கு சாரி: சன்னி லியோன்

Eyestube
அழகை காட்டாமல் ஏமாற்றியதற்கு சாரி: சன்னி லியோன் 23-sun10
மும்பை: ஜிஸ்ம் 2 படத்தில் அழகை வெளிப்படையாகக் காட்டாமல் ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்ததற்கு நடிகை சன்னி லியோன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஆபாசப் படங்களில் நடித்த சன்னி லியோன் ஜிஸ்ம் 2 இந்தி படத்தில் நடித்தார். அவரது படத்தில் கவர்ச்சி கரைபுரண்டோடும் என்று நினைத்துச் சென்ற ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவ்வாறு ரசிகர்கள் ஏமாற்றம் அடையச் செய்ததற்காக அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

சன்னி லியோனின் பேட்டி வருமாறு,

இந்தி சினிமாவில் நடிப்பது முற்றிலும் வி்த்தியாசமானதல்லவா?

நிச்சயமாக. எனக்கு இந்தி பட வாயப்பு கிடைத்தபோது பாலிவுட் என்றால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது எனக்கு தெரியும். ரசிகர்கள் எனக்கு அளி்ததுள்ள வரவேற்பு பிரமிக்க வைக்கிறது.

இந்த புகழ் எதனால் கிடைத்தது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

என்னைப் பற்றி தெரிந்து கொள்ள மக்கள் பேராவலாக உள்ளனர். அவர்கள் பிக் பாஸ் ஷோவில் என்னை பார்த்துள்ளனர். அதனால் அவர்கள் என்னை நேரில் பார்க்க விரும்புகின்றனர். நேரில் நான் எப்படி இருப்பேன் என்பதை பார்க்க விரும்புகின்றனர். ஒரு சில அரசியல் அமைப்புகள் எனது படத்தின் போஸ்டர்களை அகற்ற விரும்பினர். அதே சமயம் ஒரு சில அரசியல் பிரிவினர் தங்கள் விழாக்களில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். அனைத்து இடங்களிலும் இது போன்றவர்கள் உள்ளனர்.

படத்தில் நீங்கள் வெகுவாக ஆடைகுறைப்பு செய்யாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பது பற்றி...

இந்தியாவில் பல விதிமுறைகள் உள்ளன. சென்சார் போர்டுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆபாசப் பட உலகம் எங்கும் உள்ளது. ஆனால் நான் இந்தி படத்தில் நடித்துள்ளேன். படத்தில் அழகை பளிச்சென்று காட்டாமல் ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்ததற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எனது பட டிக்கெட்டை வாங்கியவர்களுக்கு நன்றி.

படத்தில் நடிக்கையில் உங்கள் பின்னணியும் வெளிப்படும் என்று மக்கள் எதிர்பார்ப்பது பற்றி...

நான் வேறு திரையுலகைச் சேர்ந்தவள். வேறு நாட்டில் இருந்து வந்துள்ளேன். ஜிஸ்ம் 2 தான் என் முதல் படம். என்னைப் பற்றிய நினைப்பு மாற காலம் எடுக்கும் என்று தெரியும். என்னால் நடிக்க முடியாத என்று நினைப்பவர்கள் முன்பு என்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்க விரும்புகிறேன். எனது கடந்த காலத்தை விட்டுவிட்டு புதிய எதிர்காலத்தை நோக்கி வந்துள்ளேன் என்றார்.


_________________
Eyestube | Publish Yourself
EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!