அருந்ததி, நந்தகியுடன் ஏழு ஹீரோக்கள் அடிக்கும் 'கூத்து'!

Eyestube
அருந்ததி, நந்தகியுடன் ஏழு ஹீரோக்கள் அடிக்கும் 'கூத்து'! 25-nan10
அம்முவாகிய நான் படத்துக்குப் பிறகு பத்மா மகன் இயக்கும் புதிய படத்துக்கு கூத்து என்று பெயரிட்டுள்ளனர்.

அடர்ந்த காட்டுப் பகுதி பயணத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாகும் த்ரில்லர் இது.
'26699 சினிமா' எனும் நிறுவனம் சார்பில் எஸ். மாலதி தயாரிக்கும் இந்தப் படத்தில் விமல், பிரசன்னா, ரிச்சர்ட், ஹரீஷ், பரணி, நிதிஷ், ஜெமினி பாலாஜி ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள்.

அருந்ததி, நந்தகி ஹீரோயின்கள். தினேஷ் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை - ரெஹான் இசை. பாடல்கள், யுகபாரதி.

அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் நடக்கும் பயணத்தை மையமாக வைத்து இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு, கேரளா, ஆந்திர, கர்நாடக வனப்பகுதிகளில் சிறப்பு அனுமதி பெற்று 160 கிமீ பயணித்து காட்சிகளைப் படமாக்கினார்களாம்.

கேரள காடுகளில் இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகிறது.


_________________
Eyestube | Publish Yourself
EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!