ஹன்ஸிகா Vs தமன்னா.. அக்கட பூமியில் ஒரு அக்கப்போர்!

Eyestube
ஹன்ஸிகா Vs தமன்னா.. அக்கட பூமியில் ஒரு அக்கப்போர்! 25-han10
ஹைதராபாத்: வேட்டை படத்தின் தெலுங்குப் பதிப்பில் ஒப்பந்தமான ஹன்ஸிகா நீக்கப்பட்டு, அவருக்கு பதில் தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் இரண்டு முன்னணி நடிகைகளுக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

மாதவன், ஆர்யா நடித்து தமிழில் ரிலீசான வேட்டை படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் கதாநாயகிகளாக நடிக்க ஹன்சிகா, ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

தமிழில் அமலாபால் நடித்த கேரக்டரில் ஹன்சிகாவும், சமீரா ரெட்டி நடித்த வேடத்தில் ஆண்ட்ரியாவும் நடிப்பதாக இருந்தது.

ஆன்ட்ரியாவும் ஹன்ஸிகாவும் அக்கா தங்கை போல போஸ் கொடுத்து மகிழ்ச்சியை வெளியிட்டிருந்தனர். ஆனால் அது புஸ்ஸாகிவிட்டது.

இப்போது திடீரென படத்திலிருந்து ஹன்ஸிகா நீக்கப்பட்டார். அவருக்கு பதில் தமன்னாவை தேர்வு செய்துள்ளனர். இன்றைய தேதிக்கு தமன்னா தெலுங்கில் ஹாட். அவரது சமீபத்திய படம் '100 பர்சன்ட் லவ்' படம் செம ஹிட் என்பதால் இந்த முடிவு என்றும் படக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.

ஆனால் ஹன்ஸிகாவோ, தனது பட வாய்ப்பை தமன்னா பறித்து விட்டதாக ஆத்திரத்தில் உள்ளாராம்.

தமன்னாவை மிகக் கடுமையாகத் திட்டி தனக்கு நெருக்கமானவர்களிடம் கருத்து தெரிவித்து வருகிறாராம் ஹன்ஸிகா.


_________________
Eyestube | Publish Yourself
EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!