மனோரமாவுக்கு மூச்சுத் திணறல் - மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

Eyestube
மனோரமாவுக்கு மூச்சுத் திணறல் - மீண்டும் மருத்துவமனையில் அனுமதி! 25-man10
சென்னை: மூச்சுத் திணறல் காரணமாக நடிகை மனோரமா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மனோரமா ஏற்கனவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். சில மாதங்களுக்கு முன் மாடிப்படியில் வழுக்கி விழுந்தார். இதில் அவர் காலில் முறிவு ஏற்பட்டது.

டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து காலை குணமாக்கினர். பின்னர் வீடு திரும்பி ஓய்வு எடுத்து வந்தார். சில வாரங்களுக்கு பின் மீண்டும் உடல்நிலை பாதித்தது.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தனர். செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன், கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை மருத்துவமனையில் இருந்தவர், பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார். புதிய படம் ஒன்றில் நடிக்கவும் அவர் ஒப்பந்தமாகியிருந்த நிலையில் இன்று திடீரென மனோரமாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

உடனடியாக தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர் பிரேம் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


_________________
Eyestube | Publish Yourself
EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!