எஸ்.ஏ.சி.யின் கோரிக்கையும்! டாக்டர் பாரிவேந்தரின் சம்மதமும்!!

Eyestube
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பல வருடங்களுக்கு முன் திரைக்கு வந்து வசூலை வாரிக்குவித்த தில்லு முல்லு படத்தை பத்ரி இயக்கத்தில், "சென்னை-28", "தமிழ்படம்" உள்ளிட்ட படங்களின் நாயகர் சிவா நடிக்க, வேந்தர் மூவிஸ் எஸ்.மதன் வெகு பிரமாண்டமாக தயாரிக்கிறார். எம்.எஸ்.விஸ்வநாதன், கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி உள்ளிட்ட பழைய தில்லு முல்லு டீமின் ஜாம்பாவான், டெக்னீஷியன்களுடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவும் இணைந்து பணிபுரிய இருக்கும் தில்லு முல்லு படத்தின் தொடக்க விழா, சென்னை எம்.ஆர்.சி. நகர் இமேஜ் ஆடிட்டோரியத்தில் நடிகர் கார்த்தி, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், தயாரிப்பாளர் சங்கதலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஆர்.எம்.குழுமங்களின் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் உள்ளிட்ட வி.வி.ஐ.பிக்கள் கலந்து கொள்ள வெகு விமரிசையாக நடந்தேறியது.

தில்லு முல்லு படத்தின் கிளாப்போர்டை கே.பாலசந்தரின் கைகளில் கொடுத்து இப்படத்தை தொடங்கி வைத்த டாக்டர் பாரிவேந்தர், தன் பிறந்த நாளை முன்னிட்டு விழா மேடையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சி அமைப்பிற்கும் தலா ஒரு லட்ச ரூபாய் நிதி உதவிக்கான ‌காசோலையை வழங்கினார். அதை பெற்றுக் கொண்ட தயாரிப்பாளர் சங்கதலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் விழா மேடையிலேயே டாக்டர் பாரிவேந்தருக்கு ஒரு கோரிக்கை வைத்தார். அது, இன்று தன் இனிய பிறந்தநாளில் வேந்தர் டி.வி.யை தொடங்கி வைத்து அது முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்ட்டிற்கான டி.வியாக அறிவித்திருக்கும் டாக்டர் பாரிவேந்தர் சிறிய பட்ஜெட் படங்களை தங்களது டி.விக்காக வாங்கி சிறு தயாரிப்பாளர்கள் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டிட வேண்டும் என்றார்.

எஸ்.ஏ.சி.யின் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்ட டாக்டர் பாரிவேந்தர் பெரிய ‌பட்ஜெட் படங்களை போட்டி போட்டு வாங்கி நிறைய டி.வி. சேனல்கள் இருப்பதாக எஸ்.ஏ.சி. கூறியதை நான் ஒப்புக் கொள்கிறேன். அவர் கூறியபடி நாங்கள் மட்டுமே பிழைக்க வேண்டும், வாழ வேண்டும் என்ற எண்ணம் எஸ்.ஆர்.எம். குழுமத்திற்கு என்றுமே கிடையாது. ஆகையால் சிறுபட்ஜெட் படங்களையும் புதிய தலைமுறை, வேந்தன் சேனல்கள் தொடர்ந்து வாங்கி வெளியிட பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்.


_________________
Eyestube | Publish Yourself
EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!