அனுஷ்கா - பெப்சி தொழிலாளர்கள் மோதல்: படப்பிடிப்பில் பரபரப்பு

Eyestube
கார்த்திக்கின் உறவினரான ஞானவேல்ராஜா தயாரித்து வரும் படம் அலெக்ஸ் பாண்டியன், சுராஜ் இயக்குகிறார். கார்த்திக், அனுஷ்கா, சந்தானம் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. பிரமாண்ட ஷெட் போட்டு பாடல் காட்சிகளை எடுத்து வருகிறார்கள்.

அனுஷ்கா தனக்கென்று எப்போதும் தனி மேக்-அப் மேன் வைத்துக் கொள்வார். முன்பு ஒரு திருநங்கை அவரது மேக்அப் மேனாக இருந்தார். வானம் படத்தில் அனுஷ்காவுக்கும் உதவுபவராக நடித்திருந்தார். என்ன காரணத்தாலோ இப்போது அவரை நீக்கிவிட்டு மும்பையின் முன்னணி மேக்அப் உமனான சாருசர்மா என்பரை வைத்திருக்கிறார். அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பில் சாருதான் அனுஷ்காவுக்கு மேக்அப் போட்டுள்ளார். இது எப்படியோ மேக்அப்மேன் யூனியனுக்கு தெரிந்து விட்டது.

சங்கத்தின் தொழிலாளர்கள், நிர்வாகிகள் தங்கள் அலுவலகத்தில் திரண்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு படப்பிடிப்பு தளத்திற்கு வந்தனர். அனுஷ்காவின் கேரவன் முன் நின்று கொண்டு அவரது உதவியாளரிடம். நாங்கள் அனுஷ்காவை பார்க்க வேண்டும் என்று கூறினர். அவரும் வெளியே வந்தார். "பெப்சி யூனியன் விதிப்படி நீங்கள் எங்கள் சங்கத்தை சேர்ந்தவரைத்தான் மேக்அப் உமனாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் தனி மேக்அப் உமன் எங்கள் சங்கத்தில் உறுப்பினராகவில்லை" என்று சொன்னார்கள். "அவரை உறுப்பினராக சேர்த்துக் கொள்ளுங்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நான் கட்டுகிறேன்" என்று அனுஷ்கா கூறியிருக்கிறார். "எங்கள் சங்கத்தில் சேர நான்கு வருடங்கள் எங்கள் சங்க உறுப்பினர்களிடம் உதவியாளராக பணியாற்றி இருக்க வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார்கள்.

"அவர் மும்பை சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார்" என்று அனுஷ்கா பதில் கூறியுள்ளார். தொடர்ந்து அனுஷ்காவுக்கும், தொழிலாளர்களுக்கு வாக்குவாதம் நீடித்ததால் படப்பிடிப்பு தடைபட்டது.

மேக்அப் உமனை மாற்றாவிட்டால் படப்பிடிப்பை நடத்த விட மாட்டோம் என்று தொழிலாளர்கள் உறுதியாக இருந்தார்கள். ஏற்கெனவே பெப்சி பிரச்சினையால் பல நாட்கள் இதே படத்தின் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது. மீண்டும் சிக்கலை விரும்பாத தயாரிப்பாளர், நாளை முதல் உங்கள் சங்க உறுப்பினரை பணியில் அமர்த்திக் கொள்கிறோம் என்று சொன்ன பிறகு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

அனுஷ்கா இதனை தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதுவதாகவும், இந்த பிரச்சினையை அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்திருப்பதாக சொல்கிறார்கள்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!