நடிகை சுஜிபாலா அளவுக்கு அதிகமான தூக்கமாத்திரைகளை தின்று தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சுஜிபாலா. நிறைய படங்களில் ஒரு பட பாடலுக்கு குத்தாட்டமும் போட்டுள்ளார்.
தற்போது உண்மை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை ரவிக்குமார் என்பவர் இயக்குவதுடன் தானே கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் சுஜிபாலா மீது ரவிக்குமாருக்கு காதல் ஏற்பட்டு திருமணமும் செய்ய ஆசைப்பட்டார். இதுதொடர்பாக சுஜிபாலா வீட்டிலும் பேசியுள்ளார் ரவிக்குமார். அவர்களும் திருமணத்திற்கு சம்மதிக்க, சமீபத்தில் ரவிக்குமாருக்கும், சுஜிபாலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது.
விரைவில் திருமணம் நடைபெற இருந்தநிலையில் நடிகை சுஜிபாலா அளவுக்கு அதிமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரை உடனடியாக அவரது குடும்பத்தார் மருத்துவமனையில் அனுமதித்துவிட்டனர். தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்ட சுஜிபாலா விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப உள்ளார்.
இதனிடையே சுஜிபாலாவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், பெற்றோரின் வற்புறுத்தலின் பேரிலேயே இந்த திருமணத்திற்கு அவர் சம்மதித்தாகவும், அதனால் தான் அவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.