குணம் அடைந்தார் சமந்தா

Eyestube
நோய் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான். அதுவே சினிமா நட்சத்திரங்களுக்கு வந்தால் அது அவர்களுக்கு பெரும் துயரத்தை கொடுத்துவிடும். காரணம் பிசியாக இருக்கும் ஒரு நடிகையின் ஒவ்வொரு நிமிடமும் ரொம்பவே முக்கியமானது. அப்படி ஒரு துயரத்தை சமந்தா சந்தித்தார். தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தில் அறிமுகமானார் சமந்தா. அந்தப் படம் வந்ததும் தெரியவில்லை. சென்றதும் தெரியவில்லை. அதன்பிறகு பாணா காத்தாடியில் நடித்தார்.

அதுவும் பெரிதாக போகவில்லை. தெலுங்கு பக்கம் ஒதுங்கியவருக்கு அதிர்ஷக்காற்று அடித்தது. டாப் ஹீரோக்களுடன் நடித்தார். தெலுங்கின் முதல் வரிசைக்கு மிக எளிதில் வந்தார். தெலுங்கு விண்ணைத்தாண்டி வருவாயா அவருக்கு அடுத்த பிரேக்கை கொடுத்தது. கவுதம் மேனின் ஆஸ்தான் நடிகையானார். தெலுங்கின் நம்பர் ஒன் இயக்குனர் ராஜமவுலியின் ஹீரோயின் ஆனார். நான் ஈ தமிழில் சக்கைபோடு போட்டது. தமிழ் சினிமா தவறவிட்ட சமந்தாவை ரசித்தது.

தமிழில் விட்ட இடத்தை பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை நிரம்பி வழியும் நேரத்தில்தான் அவர் சினிமா வாழ்க்கையில் அலர்ஜி என்ற வில்லன் நுழைந்தான். மணிரத்னம் படத்தின் ஹீரோயின். கார்த்திக்கின் மகன் ஹீரோ என்று சமந்தாவின் கேரியர் உச்சத்தில் அமர இருந்த நேரத்தில், அப்படி ஒரு சரிவு. கடல் படத்தின் பெரும்பாலான காட்சியில் அவர் கடல் நீரில் நின்று நடிக்க வேண்டும். இதற்கான ஒத்திகை நடந்தபோதுதான் அவருக்கு உப்பு நீர் அலர்ஜி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடல்நீரில் நடித்து திரும்பியபோது அவரது தோலில் சிவப்பு திட்டுகள் எற்பட்டது.

இது ஒன்றும் பெரிய வியாதி இல்லை. மிக எளிய மருத்துவத்தில் குணப்படுத்தக்கூடியது. ஒரு வகை ஹார்மோன் சுரப்பு குறைபாட்டால் வருவது. அந்த சுரப்பை அதிகப்படுத்தினால் பிரச்னை தீர்ந்து விடும். ஆனால் அதற்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை. இந்த கால அவகாசம்தான் சமந்தாவின் ஒட்டுமொத்த வாய்ப்பையும் தட்டிப்பறித்தது. கடல் படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை. கவுதம் மேனன், படம் ஷங்கர் படம், தெலுங்கில் ஒரு முக்கிய படம் என கைகூடி வந்த வாய்ப்புகள் அனைத்தும் கைநழுவியது. சமந்தாவுக்காக யாரும் காத்திருக்க தயாரில்லை.

இப்போது சமந்தா தீவிர சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்துவிட்டார். பூரண குணம் அடைந்து விட்டார். ஆட்டோ நகர் சூர்யா என்ற படத்தின் மூலம் தன் கணக்கை மீண்டும் துவங்கி விட்டார் சமந்தா. கடவுள் ஒன்றை உன்னிடமிருந்து பறிக்கிறார் என்றால். அதை விட பெரிதாக ஒன்றை உணக்கு கொடுக்க இருக்கிறார் என்பார்கள். அதுபோல சமந்தா இழந்த வாய்ப்புகளை விட பெரிய வாய்ப்புகள் அவருக்கு நிச்சயம் அமையும்.


_________________
Eyestube | Publish Yourself
EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!