7 ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் கூத்து!

Eyestube
கூத்து என்ற பெயரில் உருவாகும் புதிய படத்தில் 7 கதாநாயகர்கள் இணைந்து நடிக்கிறார்கள். அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் 25 வருடங்களாக தனி ராஜ்யம் நடத்தி வருகிறான், ஒரு மாயாவி. போலீசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த அவனை தந்திரமாக பொறி வைத்து பிடித்து, சுட்டுக் கொல்கிறார்கள். அவனுடைய ரகசியங்களை அறிந்து கொள்வதற்காக, 7 பேர்களை கொண்ட ஒரு அதிரடிப்படை காட்டுக்குள் செல்கிறது. அந்த அதிரடிப்படை வீரர்களுக்கு ஏற்படும் அனுபவங்களே கதை.

கூத்து படத்தில் பிரசன்னா, விமல், ரிச்சர்ட், ஹரிஷ், பரணி, நிதிஷ், ஜெமினி பாலாஜி ஆகிய 7 பேர் ஹீரோக்களாகவும், அருந்ததி, நந்தகி ஆகிய இருவரும் ஹீரோயின்களாகவும் நடிக்கிறார்கள். ரெஹான் இசையமைக்கிறார். தினேஷ் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்ய, கதை - திரைக்கதை - வசனம் எழுதி இயக்குகிறார் பத்மா மகன். இவர், அம்முவாகிய நான் படத்தை இயக்கியவர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற இருக்கிறது.


_________________
Eyestube | Publish Yourself
EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!