ஸ்ரீபூங்காவனம் சினி கிரியேஷன்ஸ், ஸ்ரீபெரியாயி பிக்சர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் குறும்புக்கார பசங்க. கதாநாயகனாக குளிர் 100 டிகிரி சஞ்சீவ் நடிக்க, கதாநாயகியாக அழகி மோனிகா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், நெல்லை சிவா, செல்லதுரை ஆகியோரும் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு கள்ளக்குறிச்சி, வெள்ளிமலை, பரிகம், தண்டலை, எடுத்தவாய் நத்தம் ஆகிய இடங்களில், 60 நாட்கள் நடைபெற்று முடிவடைந்துள்ளது. கே.பாண்டியன் ஒளிப்பதிவு செய்ய, டி.சாமிதுரை இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர், அருள்ராஜ்.
குறும்புக்கார பசங்க படம் குறித்து டைரக்டர் டி.சாமிதுரை கூறுகையில், `வேலையில்லாமல் ஊர் சுற்றும் 4 நண்பர்கள் ஒரே ஒரு பொய் சொல்கிறார்கள். அது அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப்போடுகிறது. இதுதான் படத்தின் ஒரு வரிக் கதை, என்றார்.