சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் வனயுத்தம் படத்தில் நடிகை லட்சுமிராய் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். டைரக்டர் ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் ஆடுகளம் கிஷோர் சந்தன வீரப்பன் கேரக்டரில் நடித்துள்ளார். அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இந்த படத்தில் லட்சுமிராய் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இந்த பாடல் காட்சியை டி.வி. விளம்பரங்களில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்படுகிறது.
இப்படத்தில் கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியது, சமரச பேச்சுவார்த்தைகள் நடத்தியது. இறுதியில் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது போன்றவைகளும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியது, சமரச பேச்சுவார்த்தைகள் நடத்தியது. இறுதியில் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது போன்றவைகளும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.