சென்னையில் குடியேறுகிறார் நடிகை ஹன்சிகா!

Eyestube
நடிகை ஹன்சிகா சென்னையில் குடியேற தயாராகிறார். இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் வீடு கட்ட புரோக்கர்கள் மூலம் இடம் தேடுகிறார். மாப்பிள்ளை, எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஹன்சிகா. தற்போது வாலு, சேட்டை, வேட்டை மன்னன், சிங்கம் 2 படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் மும்பையில் இருந்து சென்னைக்கு குடியேற முடிவு செய்துள்ளார். இதற்காகவே வீடு பார்த்து வருகிறார்.

இதுகுறித்து ஹன்சிகா அளித்துள்ள பேட்டியில், தமிழில் நிறைய படங்களில் நடிக்கிறேன். என் முழு கவனமும் தற்போது தமிழ் திரையுலகில்தான் உள்ளது. எனவே சென்னையில் சொந்தமாக இடம் வாங்க தீவிரமாகியுள்ளேன். கடற்கரையோரத்தில் இடம் அமைந்தால் நன்றாக இருக்கும் என்று பார்த்து வருகிறேன். கிழக்கு கடற்கரை சாலையில் இடம் வாங்கும்படி எனது நண்பர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அந்த பகுதியில் பண்ணை வீடுபோல் கட்டி குடியேற இடம் பார்க்கிறேன்.

அப்படி கிடைக்காவிட்டால் அபார்ட்மெண்டில் வீடு வாங்குவேன். குஷ்பு, ஜோதிகா, சிம்ரன் போன்றோர் தமிழ் படங்களில் நடிக்க துவங்கியதும் மும்பையில் இருந்து சென்னை வந்து குடியேறிவிட்டனர். அவர்களைப்போல் நானும் இங்கு வரப்போகிறேன், என்று கூறியுள்ளார்.


_________________
Eyestube | Publish Yourself
EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!