பிரகாஷ்ராஜ்காக ஒரு வருடம் காத்திருந்த இயக்குநர்

Eyestube
ப்ரியமுடன், யூத், இரணியன், ஜித்தன், பெருமாள் போன்ற படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா தற்போது இயக்கியுள்ள படம் துள்ளி விளையாடு.

புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப்படத்தில் ஒருமுக்கிய ரோலில் பிரகாஷ்ராஜூம் நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. விரைவில் வெளிவர இருக்க நிலையில் இந்தபடத்தில் பிரகாஷ்ராஜை நடிக்க வைக்க கிட்டத்தட்ட ஒரு வருடம் காத்திருந்து இருக்கிறார் டைரக்டர் வின்சென்ட் செல்வா.

இந்தபடத்தின் கதை தயார் செய்து அதை தயாரிப்பாளரிடம் சொன்னபோதே பிரகாஷ்ராஜை மனதில் வைத்து தான் கதையையே சொன்னாராம் டைரக்டர். ஆனால் அப்போது பிரகாஷ்ராஜ் பிஸியாக இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை. இருந்தும் டைரக்டரும், தயாரிப்பாளரும் எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லை அந்த கேரக்டரில் பிரகாஷ்ராஜே நடிக்கட்டும் என்று சொல்லிவிட்டனர்.

படத்திற்கான அலுவலகம் எல்லாம் அமைத்து கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகியும் படத்தை ஆரம்பிக்கவில்லையாம். பின்னர் பிரகாஷ்ராஜை தொடர்பு கொண்ட போது ரொம்ப காக்க வைத்துவிட்டேனோ என்று செல்லமாக கேட்டுவிட்டு பின்னர் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம்.

என்ன கதை, எங்க ஷூட்டிங், என்ன உடை, என்ன டயலாக் என்று எதவுமே கேட்கவில்லையாம். தொடர்ந்து 10நாட்கள் நடித்து கொடுத்தாராம். இந்த படத்தில் இதுவரை பயன்படுத்தாத வகையில் பட்டு வேஷ்டி, ஜிகினா-ஜிப்பா என்று கலர்புல் டிரஸ் போட்டு நடிப்பில் அசத்தி இருக்கிறாராம் பிரகாஷ்ராஜ்.

இந்தப்படத்தில் மூன்று இளைஞர்களின் வாழ்க்கையை பதிவு செய்து இருக்கும் இயக்குநர், இந்தபடத்தில் பிரகாஷ்ராஜின் நடிப்பு ஒரு புதிய களத்தை தொடும் என்று ஒட்டுமொத்த படக்குழுவும் நம்பி உள்ளது.


_________________
Eyestube | Publish Yourself
EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!