சூர்யா நடித்துள்ள மாற்றான் படம் தீபாவளிக்கு முன்பாக அக்டோபர் 12ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆக இருக்கிறது. அயன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா-கே.வி.ஆனந்த் மீண்டும் கூட்டணி சேர்ந்து இருக்கும் படம் மாற்றான். ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக இதில் சூர்யா நடித்துள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.
மிகபிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்து இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து சிங்கப்பூரில் மாற்றான் ஆடியோ ரிலீஸ் சுமார் 10 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடந்தது. படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் படமும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
இந்நிலையில் படத்தை அக்டோபர் 12-ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் செய்ய இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் அறிவித்து இருக்கிறார். மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தபடத்தின் வியாபாரமும் பெரிய அளவில் போய்உள்ளது. சூர்யா இதுவரை நடித்ததில் பெரிய பட்ஜெட், பெரிய வியாபாரம் மாற்றான் படம் தான் என்று கூறுகிறார்கள்.